"பாஜக அழுத்தம் தர ஆரம்பித்துள்ளது".. தவெக அருண்ராஜ் பேட்டி

4591பார்த்தது
“பாஜக-வை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பாஜக-வை விமர்சிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதல் மாநாட்டிலேயே பாஜகவை கொள்கை எதிரி என விஜய் அறிவித்தார். அப்போது அழுத்தம் இல்லை, மத்திய பாஜக தற்போதுதான் சிபிஐ உள்ளிட்டவை மூலம் அழுத்தம் தர ஆரம்பித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ்18