300 ஆண்டுகள் பின்னோக்கி கூட்டிச்செல்லும் பாஜக - பிரகாஷ் ராஜ்

3436பார்த்தது
பாஜக 300 ஆண்டுகள் பின்னோக்கி கூட்டிச்செல்லும் நிலையில்தான் உள்ளது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வரும் பிரகாஷ் ராஜ், மற்ற நாட்டினர் விண்வெளி வீரர்களை மீட்க, விண்வெளிக்கு ராக்கெட் விடும் அதே வேளையில், பாஜக அரசு நம் நாட்டை 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்வதற்கான வேலைகளை செய்து வருகிறது என சாடியுள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூர் வன்முறையை மேற்கோள்காட்டி இதனை அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: ஏஎன்ஐ