ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாஜக பிரமுகர் கைது

7170பார்த்தது
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாஜக பிரமுகர் கைது
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில், பாஜக பிரமுகர் பிரகாஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 22.94 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்பட்ட தனிப்படை போலீசார் 4 பேர் ஆயுத படைக்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.