பாஜக தென்காசி மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் சந்திரசேகர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (ஜன., 10) இணைந்துள்ளார். தவெக தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ்
முன்னிலையில் இணைந்த அவருக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், மாற்றுக்கட்சியினர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.