நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பீகாரில் போட்டியிடுகிறார். பீகாரில் இருந்து சிவேஷ்குமார் மற்றொரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் லட்சுமி வர்மா, ஹரியானாவில் சஞ்சய் பாட்டியா, ஒடிசாவில் மன்மோகன் சமல் மற்றும் சுஜித் குமார், மேற்கு வங்கத்தில் ராகுல் சின்கா, அசாமில் ஜோகன் மோகன் மற்றும் தெராசா கோவாலா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.