தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைப்பதற்கு பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை (பிப்., 08) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி இறுதி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமமுக, தமாகா, ஐஜேகே கட்சி நிர்வாகிகள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.