முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மாநில ஆளுநராக நியமிக்க பாரதிய ஜனதா கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்களின் வாக்குகளை உறுதிப்படுத்த பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாம். குறிப்பாக மணிப்பூர் அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.