கடந்த 2024-25 நிதியாண்டில் பாஜக கட்சி ரூ.3,157.65 கோடி நிதியை நன்கொடையாக பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் விநியோகிக்கப்பட்ட மொத்த நிதியில் 82 சதவீதத்திற்கும் அதிகமாகும். குறிப்பாக, 'ப்ரூடெண்ட்' எனும் தேர்தல் அறக்கட்டளை மட்டும் பாஜக உள்ளிட்ட 15 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,668 கோடிக்கும் அதிகமான நிதியை வாரி வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.