அசாமில் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் உள்ள 126 தொகுதிகளில் பாஜகவுக்கு 88 முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் கூட்டணிக்கு 24-36, பிற கட்சிகள் 3 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. அதே போல், கேரளாவில் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கணிக்கப்பட்டுள்ளது.