"2029-ல் பாஜக ஆட்சி முடியப்போகிறது" - தவெக விஜய்

8572பார்த்தது
"2029-ல் பாஜக ஆட்சி முடியப்போகிறது" - தவெக விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (செப்.13) அரியலூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, “வாக்காளர் பட்டியலில் பாஜக முறைகேடு செய்துள்ளது. 2029ஆம் ஆண்டில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வரும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் தில்லுமுல்லு வேலைகளை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது” என குற்றம்சாட்டினார். முன்னதாக, திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட நிலையில், அடுத்ததாக பெரம்பலூரில் பரப்புரை செய்யவுள்ளார்.

தொடர்புடைய செய்தி