6 தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகிய நிலையில், 70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பாஜக ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியதால் அண்ணாமலையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் எச்.ராஜாவும் பங்கேற்கவில்லை.