கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு எதிராக
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது, அப்போதைய
பாஜக அரசை '40% கமிஷன் அரசு' என்று விமர்சித்து
காங்கிரஸ் கட்சி விளம்பரங்களை வெளியிட்டதற்கு எதிராக
பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.