டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவிய நிலையில், 35-40 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என NDTV நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி 32-37 இடங்களையும், காங்கிரஸ் 0-2 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.