ஜனநாயகன் படம் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கருணாஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்று (ஜன.10) கூறியதாவது, “விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதால், அரசியல் சூழ்ச்சிக்காக அவரை அடிபணிய வைக்க தணிக்கை குழுவை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் நிலவுகிறது. ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம்" என்றார்.