"ரத்தக்கொதிப்பா?".. சபாநாயகருக்கு இபிஎஸ் பதிலடி

49பார்த்தது
"ரத்தக்கொதிப்பா?".. சபாநாயகருக்கு இபிஎஸ் பதிலடி
சட்டப்பேரவையில் இன்று (அக்.15) திமுகவை கண்டித்து அதிமுகவினர் கருப்புப் பட்டை அணிந்திருந்தனர். அதனைப் பார்த்த சபாநாயகர் அப்பாவு, ‘என்ன ரத்தக்கொதிப்பா?’ என கேட்டார். இந்நிலையில், "கரூர் துயரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதால் ரத்தக்கொதிப்பு” ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்துதான் கருப்புப் பட்டை அணிந்தோம். இதனை கிண்டல் செய்யும் தொனியில் சபாநாயகர் பேசியுள்ளார்” என கண்டித்துள்ளார்.