மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்கு 300 ரோஹிங்கியா அகதிகள் சென்ற மூன்று படகுகளில் ஒன்று லங்காவி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது. மேலும், மற்ற 2 படகுகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.