ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி அருகே, 11 வயது மாணவன் ஒருவன் நீர் நிறைந்த பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் காதுகளுக்கு அருகே காயங்கள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளதால், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.