தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மாணவியின் உடல் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தநல்லூர் பகுதியில், உடல் நலக்குறைவால் இறந்த பள்ளி சிறுமியின் உடலை, நேற்று (டிச.3) மாலை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நிலையில் இன்று (டிச.4) மாயமாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.