பனியன் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு: 9 பெண்கள் மயக்கம்

3666பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஆடைகளை இஸ்திரி செய்ய பயன்படுத்தப்படும் சிறிய ரக பாய்லர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென கேட்ட பயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ச்சியடைந்த 9 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தனர். உணவு இடைவேளை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், மயக்கமடைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி