குஜராத் மாநிலத்தில், உள்ள நிறுவனத்தில் திடீரென பாய்லர் வெடித்து விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பருச் மாவட்டத்தில் உள்ள விஷால் பார்மா நிறுவனத்தில், இன்று (நவ.12) அதிகாலை 2:30 மணியளவில் ஒரு பெரிய பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் 20 ஊழியர்கள் காயமடைந்தனர். இதில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அருகில் இருந்த மற்ற 4 நிறுவனங்கள் சேதமடைந்தன.