டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.