நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

17பார்த்தது
நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு இன்று (நவ., 07) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து, அருண் விஜய் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி