பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல்

14பார்த்தது
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் இன்று (நவ.19) நடைபெற்ற இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து தற்போது உரையாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக இந்த மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, விழா நடைபெறும் வளாகத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி