நடிகர் சரத்குமார், இயக்குநர் ஷங்கர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3939பார்த்தது
நடிகர் சரத்குமார், இயக்குநர் ஷங்கர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், திரைப்பட இயக்குனர் ஷங்கர், நடன இயக்குனர்கள் கலா, பிருந்தா உள்ளிட்டோரின் வீடுகளுக்கு இன்று (நவ.14) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலைத் தொடர்ந்து, அவர்களது வீடுகளுக்குச் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்போது இது வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.