எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

51பார்த்தது
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கு இன்று (அக்.14) இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில், அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தற்போது அந்த மெயில் ஐ.டி. கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி