டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் 9 பள்ளிகளுக்கு இமெயில் வாயிலாக இன்று (பிப்.9) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. "நாடாளுமன்றத்தை தகர்ப்போம்" என்ற அந்த எச்சரிக்கை கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு சோதனையில் ஈடுபட்டனர். பல மணிநேர ஆய்வுக்கு பிறகு, வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால் இது ஒரு வெறும் 'புரளி' என தெரியவந்தது.