2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக சார்பில் மண்டல வாரியாக 'வாக்குச்சாவடி முகவர்கள்' மாநாடு நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்.8-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர்.