தினமும் நாம் துண்டை பயன்படுத்தி உடலில் ஒட்டிக்கொண்டு இருக்கும் நீரை துடைக்கிறோம். இந்த துண்டின் ஓரங்களில் பார்டர் இருக்கும். அது எதற்கு என தெரியுமா? அதாவது பார்டர் துண்டை மடிக்கவும், அது விரைந்து காயவும் உதவிசெய்கிறது. துண்டுக்கு கவர்ச்சியான அடையாளத்தையும் இது வழங்குகிறது. துண்டை பயன்படுத்தும்போது ஒருகட்டத்தில் அதன் இறுதி பகுதிகள் சேதமாகும். இதனால் நீண்ட பயன்பாட்டுக்கான பாதுகாப்பு அமைப்பை பார்டர் உறுதி செய்கிறது.