உத்தரப் பிரதேச மாநிலத்தி, மோமோஸ்-க்கு ஆசைப்பட்டு 2 வீட்டில் இருந்த ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சாலையோர வியாபாரிகளுக்கு கொடுத்த சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம், இலவசமாக மோமோஸ் சாப்பிட வேண்டுமென்றால் வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வரும்படி மோமோஸ் கடைக்காரர்கள் கூறியுள்ளனர். அதனைக் கேட்டு சிறுவன் இவ்வாறு செய்துள்ளார். சிறுவனின் தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.