பிகார் மாநிலத்தில் 9 வயது சிறுமியை 13 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதிஹார் பகுதியில் போதைப்பழக்கத்தை பெற்றோரிடம் தெரிவித்ததால் கோபமடைந்த சிறுவன், வயலில் தனியாக இருந்த சிறுமியின் கழுத்தை அறுத்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் சிறுவனை கைது செய்து, சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.