ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், 17 வயது அன்ஷிகா திர்கி என்ற 5 மாத கர்ப்பிணியை, அவரது காதலன் சுமன் யாதவ் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷிகா, சுமனின் வீட்டில் தங்கியிருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அன்ஷிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார், சுமன் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.