ஒடிசாவில் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் சென்ற பெண்ணை அவரது காதலன் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஸ்மி என்ற பெண்ணுக்கும் ஹரிபந்து பட்டேல் என்ற இளைஞருக்கும் நேற்று (பிப்.22) திருமணம் நடந்துள்ளது. மணமகன் தனது மனைவியைத் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வந்த மணமகளின் முன்னாள் காதலன், மணமனகை துப்பாக்கியை காட்டி மிரட்டி, மணமகளை கடத்திச் சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.