இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் என்.ஜி மற்றும் ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் செல்லும் ரஷ்யாவின் 'ஜிர்கான்' அதிவேக ஏவுகணைகளை வடிவமைத்த ரஷ்யாவின் முன்னணி வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் லியோனோவ் (74) நேற்று காலமானார். NPO மஷினோஸ்ட்ரோயேனியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த இவரின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும்.