104 பேர் பாதிப்பு கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா

28பார்த்தது
104 பேர் பாதிப்பு கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா
கேரளாவில் 'மூளை உண்ணும் அமீபா' எனப்படும் ஆபத்தான தொற்றால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அமீபிக் என்சபாலிடிஸ் நோயை எதிர்த்து கேரளா போராடி வருகிறது. கொல்லம், திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் இதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி