கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கியத் தரவுகள் 'டார்க் வெப்'பில் கசிந்திருப்பது கடுமையான தேசிய பாதுகாப்பு மீறல் என
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். முக்கியத் துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததே இந்த ஆபத்துக்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார்.