ஹரியானா மாநிலத்தில், மேட்ரிமோனி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் காதல் பிரேக் அப் ஆகியுள்ளது. அதில் இருந்து மீள்வதற்காக விடுப்பு கேட்டு மின்னஞ்சல் செனுப்பியுள்ளார். இதனைப் பார்த்த அந்நிறுவனத்தின் CEO, அவருக்கு விடுப்பு கொடுத்தது மட்டுமன்றி, அவரின் நேர்மையையும் பாராட்டியுள்ளார். நேர்மையான காரணங்களை கூறும்போது விடுப்பு கொடுப்பது முதலாளிக்கும் ஊழியர்களுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.