தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது பல ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் முடிவடைந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய டெண்டர் கோரப்பட்டு புதிய ஒப்பந்தங்கள் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.