பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை 12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும் என சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எஸ்.பாஷா கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக நல இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கா.பொற்கொடி பதில் அளித்துள்ளார்.