ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு (பிப்., 05) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.