பலாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும், இது செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் பாதிப்பு அதிகமாகும். குறிப்பாக, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பவர்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் மறந்தும்கூட பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.