சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்த லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்தக் கோரி, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜன் இந்த மனுவை அளித்துள்ளார். "பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்க கடந்த
திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்த நிலையில், உரிமம் வழங்க நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டிருந்தால் உரிய விசாரணை நடத்த வேண்டும்" என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: நியூஸ்18