பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்

2436பார்த்தது
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, புதுடெல்லியில் இன்று (செப்.12) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இம்மாநாட்டின் முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'டெல்லி பிரகடனத்தில்', எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்குவது ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி