டெல்லி பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ராஷ்டிரபதி பவன், அதன் மியூசியம் மற்றும் அம்ரித் உத்யன் ஆகியவை செப்.11 முதல் 13 வரை 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமை தோறும் நடைபெறும் ராணுவக் காவலர்கள் பொறுப்பு மாற்றும் சடங்கு நிகழ்ச்சியும் செப்.12 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.