பிரிட்டனின் டெவான் பகுதியில் ராயல் நேவியின் 'மெர்லின் எம்கே4' ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். சோர்டன் அருகே நடந்த ராணுவ பயிற்சியின் போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குப்
பிரதமர் கீர் ஸ்டார்மர், கடற்படைத் தலைவர் க்வின் ஜென்கின்ஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.