தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதி முருகன் என்பவரை, மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது, முருகேசன், சத்தியமூர்த்தி, சோலைவேல், உமாமகேஸ்வரன், சுகுமாறன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.