நாடு முழுவதும் 4ஜி சேவை தொடங்கிய பிறகும் மலிவு விலையிலேயே திட்டங்களை BSNL வழங்கி வருகிறது. குறிப்பாக ரூ.299 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 SMS சலுகையும் கிடைக்கிறது. இதேபோல், ரூ.225 திட்டத்தில் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா உட்பட அனைத்து வாய்ஸ் மற்றும் SMS சலுகைகளும் கிடைப்பதால், இந்த திட்டங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சவால் விட்டுள்ளது.