தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை இன்று ஆகஸ்ட் 5 காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட மதிப்புமிகு மகளிர் திட்டம், இலவச எரிவாயு சிலிண்டர்கள், இளைஞர் உதவித்தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.