ராஜஸ்தானின் புஷ்கரில் கடந்த ஆக்டொபரில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் 1,500 கிலோ எடையுடன் ரூ.21 கோடி மதிப்புடைய ‘அன்மோல்’ என்ற எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனை அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் சிறப்பாக பராமரித்து வந்தார். ஆனால் கண்காட்சி முடிவுக்கு பின்னர் ‘அன்மோல்’ திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் இதை கண்டித்துள்ளனர்.