டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா

3728பார்த்தது
டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா
அகமதாபாத்தில் நேற்று (பிப்.23) நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடர்களில் 33 விக்கெட்டுகளை கைப்பற்றி, ரவிச்சந்திரன் அஸ்வினின் (32 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்து அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரரானார். இருப்பினும், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்தி