பேருந்து விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

18பார்த்தது
பேருந்து விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு
தெலங்கானா மாநிலத்தில், லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 17 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 70 பயணிகள் இருந்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.